தமிழ்நாடு
சாலைகளில் பெய்யும் மழை நீரைச் சேமிக்க கோயம்புத்தூருக்கு வரும் ஜெர்மன் தொழில்நுட்பம்!

சாலைகளில் பெய்யும் மழையைச் சேமிக்க ஜெர்மன் தொழில்நுட்பத்தைக் கோயம்புத்தூர் நகராட்சி செயல்படுத்த உள்ளது.
கோயம்புத்தூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் மழை நீரை சேமிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கு ஸ்டோன் ஹேண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் உதவியுடன் 25 அடுக்குகளாக மழை நீரை சேமித்து மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த மழை நீர் பல்வேறு அடுக்குகள் கொண்ட கூழாங்கற்கள் வழியாக வடிகட்டப்படும்.