தமிழ்நாடு
சென்னையின் முதல் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’.. எங்கு? எப்போது?

சென்னையில் முதல் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ விரைவில் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநில உணவுகள், உலக நாடுகளின் பல்வேறு சிறப்பு உணவுகள் சென்னையில் கிடைக்கும். இருந்தாலும் சென்னையில் உணவுக்கு என தனி சாலைகள் ஏதும் இல்லை.
அந்த குறையைப் போக்கும் விதமாக சின்னமலை அருகில் உள்ள ராஜீவ்காந்தி சாலையிலிருந்து ராஜ்பவன் சாலை வரை 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஃபுட் ஸ்ட்ரீட் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Chennai’s Food Street To Start Soon In Little Mount
மேலும், இந்த ஃபுட் ஸ்ட்ரீட்டில் சென்னையில் உள்ள பிரபல உணவகங்களின் எல்லா உணவுகளும் இந்த சாலையில் விற்பனை செய்யும் படி அமைக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
இந்த சாலையை அமைக்க 20 கோடி ரூபாயைச் சென்னை மாநகராட்சி அமைக்க உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளுடன் உணவு திருவிழாவையும் இங்கு கொண்டாட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை தீவுத் திடலில் அவ்வப்போது உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இனி தினம் தினம் சின்ன மலையில் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.