உலகம்
பியூஷ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட்.. அருண் ஜெட்லி என்ன சொன்னார் தெரியுமா?

டெல்லி: மத்திய பாஜக அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி புகழ்ந்து இருக்கிறார்.
மத்திய பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தது. மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட் குறித்து பல தலைவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து அருண் ஜெட்லி தெரிவித்துள்ள கருத்தில், கடந்த 2014ல் இருந்தே மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு பெரிய அளவில் பலன் அளித்து வருகிறது. தற்போது பியூஷ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட்டும் நடுத்தர வர்கத்த்து மக்களுக்கும், ஏழைகளுக்கும் பெரிய உதவியாக இருக்கும். இது ஒரு மிக சிறந்த பட்ஜெட்.











