பிற விளையாட்டுகள்
ஒலிம்பிக்ஸ் 2024-ல் இணைக்கப்பட்ட ப்ரேக் டான்ஸ்..!

வருகிற 2024-ம் ஆண்டு முதல் புதிதாக நான்கு விளையாட்டுகள் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
வருகிற 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸில் புதிதாக ப்ரேக் டான்ஸிங் நடனப் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. கடல் சறுக்கு, ஏற்றம் ஏறுதல், ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுகளும் புதிதாக ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளைப் புதுப்பிக்கவும் நன்கொடையாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கவரும் விதமாகவும் புதிதாக இந்த நான்கு போட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் ப்ரேக் டான்ஸிங் அறிமுகப்படுத்தப்படுவதற்கு நடனத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 1970-ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இந்த ப்ரேக் டான்ஸிங் நடன முறை அறிமுகமானது.
ஹிப் ஹாப் கலாச்சாரத்தின் ஒரு வகை நடன முறையே ப்ரேக் டான்ஸிங் ஆகும். தற்போது இந்த நடன முறை அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி உள்ளதால் இந்த நடன முறையை ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


















