சினிமா செய்திகள்
பாண்ட் பேபி டனியா மல்லெட் காலமானார்

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நாயகிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் வழங்கப்படும். சில படங்களில் வில்லியாகவும் நாயகிகள் நடித்திருந்தனர்.
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் மூன்றாவதாக வெளிவந்த கோல்டு ஃபிங்கர் படத்தின் நாயகி டனியா மல்லெட் காலமானார். 1964-ம் ஆண்டு வெளியான கோல்டு ஃபிங்கர் படம் உலகளவில் ரசிகர்களை ஈர்த்தது.
ஆனால், அந்த படத்திற்கு பிறகு, பெரிய படங்களில் டனியா நடிக்கவில்லை. 77 வயதான டனியா, உடல் நலக் குறைவு மற்றும் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்ததாக ஜேம்ஸ்பாண்ட் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்களில் அதிகளவில் நடிக்காவிட்டாலும், பேஷன் மற்றும் மாடலிங் துறையில் டனியா மல்லெட், தனக்கென தனி இடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.















