டிவி
ஆரியை வறுத்தெடுக்கும் பாலாஜி.. பதிலடி கொடுப்பாரா?

சென்ற வாரம் நிவர் புயல் காரணமாக பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வந்த கால் செண்டர் டாஸ்க் நிறுத்தி வைக்கப்பட்டு, இந்த வாரமும் தொடர்கிறது.
இன்றைய முதல் ப்ரோமோவில், சென்ற வாரம் வாடிக்கையாளர்களாக இருந்தவர்கள் கால் செண்டர் ஊழியர்களாகவும், ஊழியராக இருந்தவர்கள் வாடிக்கையாளர்களாகவும் மாறியுள்ளனர்.
ஆரியை அழைக்கும் பாலாஜி, வணக்கம் ப்ரோ, பிக்பாஸ் வீட்டிற்கு வெளியில் நான் உங்களின் மிகப் பெரிய ரசிகன், நீங்க நான் யாரையும் காலி பண்ணி விளையாட மாட்டேன். வாங்க சேர்ந்து விளையாடலாம் என்று நீங்கள் அடிக்கடி செல்வீர்கள். ஆரி யாரையும் காலி பண்ணி விளையாட வேண்டும் என்று நினைக்கவில்லையா? என்று கேள்வி கேட்கிறார்.
மேலும், நான் கெட்டவனென்று சொல்ரவன நம்பலாம், நான் நல்லவனென்று சொல்ரவன கூட நம்பலாம், ஆனால் நான் மட்டும்தான் நல்லவனென்று சொல்ரவன மட்டும் நம்பவே கூடாது என்று பாலாஜி கூற, உடனே ஆரிக்கு முக பாவனை மாறுவது போலவும் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.