டிவி
பாலா-வை சந்தோஷப்படுத்துவதில் மட்டும் கவனமாக இருக்கும் ஷிவானி!

பிக்பாஸ் வீட்டில் பாலாவை மட்டுமே ஷிவானி சந்தோஷப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டின் இந்த வார நாமினேஷனின் போது, பாலா – ஷிவானி இருவருக்கும் கதால் கண்ணை மறைக்கிறது என்று கூறி எவிக்ஷனுக்கு தள்ளப்பட்டனர்.
அதை அனைவரின் மத்தியிலும் பிக்பாஸ் போட்டு உடைக்க, ஷிவானியிடம் எனக்குக் காதல் வந்தால் சொல்கிறேன், ஆனா வராது என்று பாலா கூற ஷிவானி காண்டாவது போல காட்சிகள் வெளியாகின.
இந்நிலையில் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில், ஆஜித், ரம்யா பாண்டியன், சம்யுக்தா 3வரும் இந்த வாரம் எவிக்ட் ஆவார்கள் என்று பேசி வருகின்றனர்.
அதற்கு ஆஜித் சுச்சி, ஷிவானி என்று கூறுகிறார். ஷிவானி எப்படி வெளியேறுவார் என்று சம்யுக்தா கேட்க, அவள் ஏதுவும் செய்யாமல் இருந்தது தான் அதற்குக் காரணம் என்று கூறுகின்றனர்.
மேலும் ஒரு படி மேலே சென்ற ரம்யா பாண்டியன், ஷிவானி பாலாவைச் சந்தோஷப்படுத்துவதை மட்டும்தான் பிக்பாஸ் வீட்டில் வேலையாக வைத்துள்ளார், பாலா மாமா என்று அவர் பின்னாலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.