ஆரோக்கியம்
பாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

பாலக்கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், சுண்ணாம்பு, இரும்புச்சத்துகள் அதிகம் உள்ளன. இந்த கீரையை சமைக்காமல் இதன் தளிர்களை பச்சையாக மென்று சாப்பிடலாம். பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச் செடியாகும்.
பாலக்கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் பெருவயிறு குறையும். பாலக்கீரை சாப்பிடுவதன் மூலம் அனிமீயா நோய் வராமல் தடுக்கலாம்.
பாலக்கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
உஷ்ணத்தினால் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு இருந்தாலும் போய் விடும். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தசோகை குணமாகும். ருசியின்மையை போக்கி பசியை உண்டாக்கும். பித்தம் சம்பந்தமான வாந்தி, கிறுகிறுப்பு போன்றவற்றை அகற்றும்.
கண் பார்வை நன்றாக தெரிய பாலக் கீரை உதவி செய்கிறது. கண்ணில் ஏற்படும் நோய்களான மாலைக்கண் நோய், மற்றும் கண்களில் ஏற்படும் அரிப்பு, போன்றவை வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.

















