வேலைவாய்ப்பு
பரோடா வங்கியில் 2,500 உள்ளூர் அதிகாரி பணியிடங்கள் – தமிழ்நாட்டுக்கு 60 இடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 24

பரோடா வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு – தமிழ்நாட்டுக்கு 60 இடங்கள் ஒதுக்கீடு!
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கி, தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணிக்காக 2,500 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கே 60 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் ஜூலை 4 முதல் www.bankofbaroda.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பெறப்படுகின்றன. கடைசி நாள் ஜூலை 24, 2025.
🎓 தகுதி மற்றும் வயது வரம்பு:
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: மண்டல ஊரக வங்கி அல்லது அட்டவணை வணிக வங்கிகளில் குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் கட்டாயம்.
வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை (01.07.2025 தேதியின்படி)
SC/ST: 5 ஆண்டு தளர்வு
OBC: 3 ஆண்டு தளர்வு
மாற்றுத் திறனாளிகள்: 10 ஆண்டு தளர்வு
முன்னாள் ராணுவத்தினர்: வயது தளர்வு நடைமுறையில் உள்ளது.
💰 ஊதியம்:
மாத சம்பளம் ₹48,480 முதல் ₹85,920 வரை.
📝 தேர்வு முறைகள்:
Preliminary Online Test – 120 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
பொதுப் பிரிவு: குறைந்தபட்சம் 40% தேவை
இடஒதுக்கீடு பெறும் பிரிவுகள்: 35% தேவை
நேர்காணல் அல்லது குழுக் கலந்துரையாடல்
மொழி தகுதி தேர்வு – தேர்ச்சி பெற்றவர்கள் மொழி பரிச்சையிலும் தகுதி பெற வேண்டும்.
தேர்வு தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெறும்.
💵 விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவு / OBC: ₹850
SC / ST / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர்: ₹175
தகுதி உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி, தேர்விற்கான முழுமையான அறிவிப்பை வாசித்து, நேரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


