செய்திகள்
புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு!

புதிய ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு இந்த மாதம் முதல் 2.8 லட்சம் பேர் வரை புதிய ரேஷன் கார்டுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
புதிய ரேஷன் அட்டை விபரம்: தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளின் மூலம் வழங்கி வருகிறது. குடும்பத்தலைவரின் கைரேகை பதிவு இருந்தால் மட்டுமே இந்த பொருட்களை பெற முடியும். திருமணம் ஆனவர்கள் மற்றும் கூட்டுக் குடும்பமாக வசிக்கும் பலரும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
அந்தவகையில், 2.8 லட்சம் பேர் ரேஷன் கார்டு பெற இந்த மாதம் முதல் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கார்டு பெற்றவுடன் தகுதியானவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில், முன்னதாக 1.15 கோடி பயனாளர்கள் இருந்த நிலையில், சமீபத்தில் மேலும் 1.48 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டதும், மொத்த பயனாளர்கள் எண்ணிக்கை 1.19 கோடி ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















