தமிழ்நாடு
சயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வரதர: நீல நிற பட்டு உடுத்தி தரிசனம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். அத்திவரதை பார்க்க பொதுமக்கள் கால்கடுக்க பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலால் இதுவரை பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் சிலர் விவிஐபி பாஸ் மூலம் மிகவும் வசதியாக வந்து பார்த்து செல்கின்றனர். இது பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. அத்தி வரதரை பார்க்க குடியரசுத்தலைவர், முதல்வர் என பல முக்கியமானவர்கள் வந்து சந்தித்து சென்றுள்ளனர். ஆனால் பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடியின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வளவு நாள் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்தி வரதர் தற்போது எழுந்து நின்று காட்சி அளிக்கிறார். காஞ்சிபுரம் அத்தி வரதர் நின்ற கோலத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 17 வரை பக்தர்களுக்கு காட்சி தருகிறார். நீல நிற பட்டு உடுத்தி அருள் பாலிக்கும் அத்தி வரதரை, அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனையடுத்து கடைசி நாட்களில் பிரதமர் மோடியும் வந்து நின்ற கோலத்தில் உள்ள அத்தி வரதரை தரிசிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

















