சினிமா செய்திகள்
அப்பாவை இயக்குவேன் – துருவ் விக்ரம் உறுதி!

வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இந்நிலையில், இயக்கத்திலும் தனக்கு விருப்பமிருப்பதாகவும், கண்டிப்பாக என் அப்பா சியான் விக்ரமை வைத்து ஒரு சூப்பரான படத்தை இயக்குவேன் என துருவ் விக்ரம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாலாவின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா படம் அடுத்த மாதம் காதலர் தின பரிசாக வெளியாகிறது. இப்படத்தின் டிரைலரை நாளை மாலை 4.30 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிடுகிறார்.
விக்ரமும் சூர்யாவும் பாலாவின் பிதாமகன் படத்தில் நடித்திருந்த நிலையில், பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள வர்மா படத்தின் டிரைலரை சூர்யா வெளியிடுகிறார்.
வர்மா படம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.



















