தமிழ்நாடு
ஓபிஎஸ்ஸை சந்திக்கும் பாஜக தலைகள்.. முற்றும் எடப்பாடி vs அண்ணாமலை மோதல்

சென்னை: எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை இடையிலான மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது.
பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜக நிர்வாகி திலீப் கண்ணன் நேற்று அண்ணாமலையை சரமாரியாக விமர்சனம் செய்துவிட்டு அதிமுகவில் இணைந்து உள்ளார்.
பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனர். நிர்மல் வெளியேறிய சில நிமிடங்களில் பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் அண்ணாமலை – எடப்பாடி இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வத்திடம் பாஜக நெருங்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று ஓ பன்னீர்செல்வத்தை தேனியில் பாஜக தலைவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக தலைவர்களை எடப்பாடி வரிசையாக தன் பக்கம் இழுத்துக்கொண்டு இருக்கிறார். பல தலைவர்களை தனக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு இருக்கிறார்.அதனால் கோபம் அடைந்த பாஜக தலைவர்கள் ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று ஓ பன்னீர்செல்வம் வீட்டில் முக்கிய கூட்டம் ஒன்றும் நடக்க உள்ளதாம். இந்த கூட்டத்தில் அதிமுக – பாஜக இடையிலான உறவு, மோதல் குறித்து விவாதிக்க உள்ளனர். அதேபோல் பாஜகவின் ஆதரவு யாருக்கு, எடப்பாடியின் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்., எடப்பாடியை சமாளிப்பது எப்படி என்றும் ஆலோசனை செய்ய இருக்கிறார்களாம்.
இதில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், எடப்பாடிக்கு எதிராகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றன. .