வணிகம்
ஏர்இந்தியா நிறுவனம் அக்டோபர் 1 முதல் செயல்படாதா? வதந்தியை நம்ப வேண்டாம்?

இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் எல்லாம் கடனில் சிக்கித் தவித்து வருகின்றன. அதில் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவும் விதிவிலக்கல்ல.
ஏர் இந்தியா நிறுவனம் 45,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வரும் நிலையில் இந்த நிறுவனம் 2018 அக்டோபர் 1 முதல் செயல்படாது என்றும் மூடப்பட உள்ளதாகவும், ஊழியர்களை வேறு வேலை பார்த்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இந்தச் செய்தி வேகமாகப் பரவிய நிலையில் அதற்கு ஏர் இந்தியா நிறுவனம் மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் ஏர் இந்தியா நிறுவனம் 2018 அக்டோபர் 1 முதல் மூடப்படும் என்பது போலியான செய்தி என்றும், இது போன்ற தவறான தகவல்களைப் பகிர்வதை நிறுத்துமாறும் விளக்கம் அளித்துள்ளது.






















