இந்தியா
ஏர் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ் பிரிட்டன் அதிபர்கள்: என்ன காரணம்?

ஏர் இந்தியாவின் நிறுவனத்தை இந்திய அரசு நடத்திக் கொண்டிருந்தபோது பெரும் நஷ்டத்தில் இருந்த நிலையில் அந்த நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு கைமாறியது என்பது அதன் பிறகு ஏர் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
டாடா சந்திரசேகர் தலைமையிலான ஏர் இந்தியா நிறுவனம் ஆரம்பத்தில் சில தடுமாற்றத்துடன் இருந்தாலும் தற்போது ஏர் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியா முழுவதும் விமான சேவைகளை மேம்படுத்தவும் இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நாடுகளையும் இணைக்கும் விமான சேவையை நடத்தவும் டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக இதுவரை ஏர் இந்தியா வரலாற்றிலேயே இல்லாத அளவில் 470 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டாடா குழுமத்திற்கு அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் அதிபர்கள் தங்களது நன்ற ியை தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றிய டாடா குழுமம் ஏர்பஸ் நிறுவனத்திடம் 250 விமானங்களும் போயிங் நிறுவனத்திடம் 220 விமானங்களையும் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை சமீபத்தில் கையெழுத்து விட்டது. இந்த 470 விமானங்களின் மொத்தம் மதிப்பு சுமார் 80 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. ஏர் இந்தியாவின் இந்த மிகப்பெரிய ஆர்டர் மூலம் வேலை வாய்ப்பு, உற்பத்தி, லாபம், மற்றும் பொருளாதார மேம்படும் என்பதால் அமெரிக்கா பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அதிபர்கள் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்த மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் அமெரிக்காவில் மட்டும் கிடைக்கும் என்றும் தற்போது கல்லூரிகளில் படித்துக் கொண்டு இருப்பவர்கள் கூட படித்து முடித்தவுடன் வேலையில் சேர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியிடம் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் அதே போல் டாடா குழுமத்திற்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய விமானங்களை வாங்கும் இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் பலன் கிடைக்கும் என்று ஜோபைடன் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரு பக்கம் அமெரிக்க அதிபரின் பாராட்டு குவிந்தது என்றால் இன்னொரு பக்கம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் டாடா குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், டாடா குழுமத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். டாடாவின் இந்த ஒப்பந்தம் காரணமாக வேலை வாய்ப்பு, ஏற்றுமதி ஆகியவை இங்கிலாந்து நாட்டில் அதிகரிக்கும் என்று ரிஷி சுனக் கூறியுள்ளார்.























