இந்தியா
8 இந்திய நிறுவனங்களில் இருந்து 9000 ஊழியர்கள் வேலைநீக்கம்.. எந்தெந்த நிறுவனங்களில் இருந்து எத்தனை பேர்?

வேலைநீக்க நடவடிக்கை செய்தி தற்போது தினந்தோறும் வெளிவர தொடங்கிவிட்டது என்பதும் உலகின் முன்னணி நிறுவனங்களே வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். மேலும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இரண்டாம் கட்ட வேலைநீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதும் இதனால் நாளுக்கு நாள் வேலை இல்லா திண்டாட்டம் பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை நீக்க நடவடிக்கை எடுப்பதில் சர்வதேச நிறுவனங்கள் மட்டுமின்றி இந்திய நிறுவனங்களும் விதிகளுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தியாவின் 8 முன்னணி நிறுவனங்கள் சுமார் 9000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. அது குறித்து பார்ப்பது பார்ப்போம்

layoff
பைஜூஸ் – 4,000
அகாடமி – 1,500
ஓலா – 1,400
வேதாந்து – 1,100
ஸ்விக்கி – 630
கார்கள் 24 – 600
ஓயோ – 600
பகிர்தல் – 600
வேலை நீக்க நடவடிக்கை என்பது இதோடு முடியாது என்றும் இன்னும் பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஏஇ என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. தொழில்நுட்பம் வளர வளர வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒரு சில தொழில்நுட்பங்களால் ஒரு சில துறைகளையே மூடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது
எதிர்காலத்தில் எந்த துறை வெற்றிகரமாக இருக்கும் என்பதை யூகித்து அந்த துறையைச் சேர்ந்த படிப்புகளை படித்தவர்கள் மட்டுமே வேலை நீக்க நடவடிக்கையில் இருந்து தப்பிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.