தமிழ்நாடு
அண்ணாமலைக்கு ஆதரவாக இந்து முன்னணி: வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது!

வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த வதந்தி விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீசார். இந்நிலையில் திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் அண்ணாமலை சவால் விடுத்துள்ள நிலையில் அவருக்கு ஆதராவக இந்து முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது.

#image_title
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது, புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டது. இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியது, கலவரத்தை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்தது என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணாமலை, வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்! என சவால் விடுத்தார்.
இதனையடுத்து தற்போது அண்ணாமலைக்கு ஆதரவாக இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. பிகார் பாஜகவினர் வதந்தியை பரப்பினார்கள் என அவர்களை கைது செய்ய டில்லி வரை சென்றுள்ளார்கள் தூத்துக்குடி காவல்துறை.
ஆனால் திமுக, விசிக, நாம் தமிழர், தமிழர் வாழ்வுரிமை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் பேசிய கருத்துகள் குறித்து காவல் துறைக்கு தெரியுமா? காவல் துறையும், சட்டமும், நீதிமன்றமும் ஒருதலைபட்சமாகத்தான் செயல்படுமா என்பது மக்கள் எழுப்பும் கேள்வியாக உள்ளது என இந்து முன்னணி தெரிவித்துள்ளது.