சினிமா
சைக்கோ கில்லராக நடிக்கும் நடிகர் ஜெய்… இயக்குனர் யார் தெரியுமா?…

குறைந்த பட்ஜெட்டில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தந்தவர் சுந்த சி. எனவே, அவர் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
அவரின் இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெற்றது. இப்படத்தில் அவர் நடித்தும் இருந்தார். மேலும், ஆண்ட்ரியா, ஆர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், ஒரு புதிய படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் பத்ரி இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே வீராப்பு, ஐந்தாம் படை ஆகிய படங்களை இயக்கியவர். இப்படத்தில் ஜெய் வில்லனாக நடிக்கவுள்ளாராம். அதுவும், தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ வில்லனாக நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் சுந்தர் சி போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




















