சினிமா செய்திகள்
எல்கேஜி பட இயக்குநருக்கு கார் பரிசளித்த ஐசரி கணேஷ்!

தனியார் பொறியியல் கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சமீபகாலமாக சினிமா தயாரிப்பு பணிகளில் இறங்கி வெற்றி பெற்று வருகிறார்.
ஜெயம்ரவியின் அடங்கமறு படத்தை தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி படத்தை தயாரித்திருந்தார் ஐசரி கணேஷ். ஷங்கரின் 2.0 படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், எல்கேஜி படம் மாபெரும் வெற்றியை பெற்றவுடன் அப்படத்திற்காக சக்சஸ் மீட் அண்மையில் நடைபெற்றது. ஆனால், அந்த சக்சஸ் மீட் பார்ட்டிக்கு இயக்குநர் கே.ஆ. பிரபு பைக்கில் தான் வந்தார். அதனை சில ஊடகங்கள் செய்தியாகவும் வெளியிட்டன.
இதனை கருத்தில் கொண்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பிரபுவுக்கு ஒரு புதிய ஹுண்டாய் காரை பரிசாக அளித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, நாயகி பிரியா ஆனந்த், இயக்குநர் ஜெயம் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பேசிய கே.ஆர். பிரபு, அரசியல் விமர்சன படத்திற்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும், தான் மிகவும் எளிமையை விரும்பித்தான் பைக்கில் வலம் வந்து கொண்டிருந்தேன். அந்த செய்தியை படித்து விட்டு, தயாரிப்பாளர் கார் பரிசளித்தாரா? இல்லையா என தெரியவில்லை என தெரிவித்தார்.




















