இந்தியா
இரட்டை இலை வழக்கு: பிரபல நடிகையின் ரூ.7 கோடி சொத்துக்கள் முடக்கம்!

இரட்டை இலை வழக்கில் பிரபல நடிகையின் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்கி தருவதாக சுகேஷ் சந்திரா என்பவர் லஞ்சம் வாங்கியதாக தகவல் வெளியானதை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைதாகி சுகேஷ் சந்திரா சிறையில் இருக்கும் நிலையில் அவர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு ஏராளமான பரிசு பொருட்கள் வாங்கி வழங்கியதாக இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இதை மறுத்திருந்தார் .
இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு சொந்தமான ரூ 7 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.























