தமிழ்நாடு
சென்னை மாநகராட்சி செய்த சாதனை: இழுத்து மூடப்படும் அபாயத்தில் தனியார் பள்ளிகள்!

சென்னை மாநகராட்சி பள்ளிகள் செய்து பெரும் சாதனை காரணமாக கூடிய விரைவில் சென்னையில் தனியார் கல்லூரிகள் இழுத்து மூட கூடிய நிலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடுத்தர வர்க்கத்து பெற்றோர் கூட அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க தயங்குவார்கள். தனியார் பள்ளியின் மோகம் பெற்றோர்களுக்கு அதிகம் இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் முன் வந்து கொண்டிருக்கின்றன .
சென்னையை பொறுத்தவரை கடந்த ஆண்டு 90 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை சேர்ந்த நிலையில் இந்த ஒரே ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்றும் இந்த ஆண்டு மட்டும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து உள்ளார்கள் என்றும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
இதே ரீதியில் சென்றால் அடுத்த சில வருடங்களில் சென்னையில் உள்ள அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக இழுத்து மூடப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

















