சினிமா செய்திகள்
தமிழ்நாடு வேண்டாம், புதுச்சேரியை குறி வைக்கின்றாரா விஜய்?

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் விஜய் நேரடியாக அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் தமிழகத்தை குறி வைக்கவில்லை என்றும் புதுச்சேரியை தான் குறி வைத்துள்ளார் என்றும் கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. பாஜக அவ்வப்போது தொல்லை கொடுத்து வருவதால் பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டு புது கூட்டணி அமைக்க புதுச்சேரி முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .
சமீபத்தில் புதுச்சேரி முதல்வர் விஜய்யை அவரது பனையூர் வீட்டில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும்போது புதுவையில் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரங்கசாமி கட்சி ஆகியவை இணைந்து போட்டியிடும் என்றும் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது .
இதனால் விஜய்யை புதுச்சேரியில் புரமோட் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பீஸ்ட் புதுச்சேரியில் திரையிட உள்ள நிலையில் புதுவையில் விஜய் மற்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகிய இருவரும் இணைந்த கட் அவுட் பல திரையரங்குகளில் வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
























