உலகம்
நான் ஏலியனை பார்த்தேன்.. மோடிக்கு சென்ற திக் இ-மெயில்.. என்ன நடந்தது?

புனே: புனேவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் ஏலியனை பார்த்ததாக பிரதமர் மோடிக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்.
உலகம் முழுக்க பல ஆயிரக்கணக்கான மக்கள் தாங்கள் ஏலியனை பார்த்ததாக கூறி உள்ளனர். எங்கள் வீட்டிற்கு மேல் ஏலியனின் மிதக்கும் விமானம் சென்றது, நான் பார்த்தேன் என்று பலர் சொல்லி இருக்கிறார்கள்.
இதற்காக பலர் வீடியோக்கள் கூட வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவரும் இதேபோல் ஏலியனை பார்த்ததாக கூறியுள்ளார்.
கடந்த வாரம் பிரதமர் மோடியின் அலுவலக மெயில் ஐடிக்கு முக்கியமான மெயில் ஒன்று வந்தது. அந்த மெயிலை அனுப்பிய நபர் ”எங்கள் வீட்டிற்கு வெளியே ஏலியன்களின் விமானத்தை பார்த்தேன். ஏலியன்கள் நம்மிடம் பேச விரும்பப்படுகிறது. இதை உடனடியாக விசாரியுங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார். இது பிரதமர் அலுவலக மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த மெயிலை பிரதமர் அலுவலகம் உடனடியாக மகாராஷ்டிரா காவல் நிலையத்திற்கு அனுப்பியது. அதையடுத்து மகாராஷ்டிரா காவல்துறை இந்த மெயில் அனுப்பிய நபரை தேடியது. மெயில் ஐடியை வைத்து, சைபர் கிரைம் மூலம் யார் என்று விவரங்களை தேடியது.




















