சினிமா செய்திகள்
ஜி.வி. பிரகாஷின் காதலர் தின பரிசு என்ன தெரியுமா?

2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தன்று ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள 100% காதல் ரிலீசாகிறது.
100% லவ் என்ற தெலுங்கு ரீமேக் படம் தான் இது. அந்த படத்தில் நாகசைதன்யா, தமன்னா நடித்திருந்தனர். அதன் தமிழ் ரீமேக்கான 100% காதல் படத்தை சந்திரமெளலி இயக்கியுள்ளார். தம்பி ராமய்யா, நாசர், தலைவாசல் விஜய் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறது. மேலும் தணிக்கை குழு இந்த படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளது. படம் 2019ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.
கல்லுரியில் மாணவன் மாணவிக்கு இடையே உள்ள போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து படத்தை உருவாக்கியிருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை கணேஷ்.ஆர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.




















