சினிமா செய்திகள்
நடிகை அமலாபாலுக்கு கிடைத்த கெளரவம்: புகைப்படம் வைரல்!

பிரபல நடிகை அமலாபாலுக்கு கிடைத்த கெளரவம் குறித்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகை அமலாபாலுக்கு ஐக்கிய அரபு எமிரேட் அரசு கோல்டன் விசா வழங்கி உள்ளது. இதுகுறித்து அமலாபால் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் செய்துள்ள பதிவில் ’எல்லோரும் தங்கத்தை தேடு என்கின்றார்கள், நானும் தேடினேன், எனக்கும் கோல்டன் விசா கிடைத்து விட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ் நடிகையான த்ரிஷா, நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், பாடகி சித்ரா உள்பட பலருக்கு இந்த கோல்டன் விசா கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகைச் சேர்ந்த மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், உள்ளட்டவர்களுக்கும் பாலிவுட் நடிகையான ஊர்வசி ரெளட்டாலாவுக்கும் இந்த கோல்டன் விசா கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் இந்த கோல்டன் விசா பத்து வருடங்கள் செல்லத்தக்கது என்பதும் இந்த பத்து வருடங்களும் அவர்கள் அந்நாட்டின் குடிமகன் போலவே கௌரவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
They say go for Gold, and for gold I went! ????
Received UAE's Golden visa today. Feeling absolutely fantastic. ????
Thank you to everyone that made this happen. ❤️#grateful #blessed #dubai #dubailife #UAE #emiratesfirst #dubaigovernment #mydubai pic.twitter.com/WGYvMF2YgZ— Amala Paul ⭐️ (@Amala_ams) December 28, 2021


















