சினிமா செய்திகள்
குக் வித் கோமாளி சீசன் 3: அட்டகாசமான புரமோ வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசன்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக இரண்டாவது சீசனில் குக்குகள் மற்றும் கோமாளிகள் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தனர் என்பதும் தெரிந்ததே.
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அஸ்வின், பவித்ரா, தர்ஷா, புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் திரையுலகிலும் தற்போது பிசியாக உள்ளனர் என்பதும் அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு புகழை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது வரும் என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் சற்று முன்னர் விஜய் டிவியில் இதுகுறித்த புரமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த புரமோ வீடியோவின்படி ஷிவாங்கி, சுனிதா, மணிமேகலை மற்றும் பாலா ஆகிய நால்வர் கோமாளிகளாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகிய இருவரும் நடுவர்களாக இருப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மற்ற கோமாளிகள் மற்றும் குக்குகள் யாரென்பது அடுத்தடுத்து வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குக் வித் கோமாளி சீசன் 3 ஒளிபரப்பாக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.