தமிழ்நாடு
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் ஆங்கிலம் நீக்கப்படும்: தமிழ்த்தாள் மட்டுமே மதிப்பீடு என அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இதுவரை பொது தமிழ், பொது ஆங்கிலம் என இரண்டு தாள்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதிய நிலையில் தற்போது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு தமிழ்த்தாள் மட்டுமே மதிப்பீடாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன என்பதும் தமிழக அரசு பணிகளில் சேர இந்த தேர்வுகளை விண்ணப்பதாரர்கள் எழுத வேண்டும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் குரூப்-1, குரூப்-2, மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் தேர்வுடன் சேர்த்து தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது தமிழ், பொது ஆங்கிலம் தாள்களில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டு தமிழ்த்தாள் மட்டுமே தேர்வு மதிப்பீடு நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் எழுதி தேர்ச்சி பெற முடியும் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ்த்தாள் கட்டாயம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது கருதத்தக்கது.















