சினிமா செய்திகள்
நன்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை: ‘ஜெய்பீம்’ ஆதரவாளர்களுக்கு சூர்யா டுவிட்!

‘ஜெய்பீம்’ படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டபோது ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வார்த்தைகளே கிடைக்கவில்லை என சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்திற்கு பாமகவினர் உள்பட ஒரு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக இந்த படத்தின் வில்லன் கேரக்டர் வன்னியர் போல் குறிக்கப்பட்டு இருப்பதாகவும் இது வேண்டுமென்றே செய்யப்பட்டிருப்பதாகவும் வன்னியர் அமைப்புகள் குற்றம் சாட்டின.
இது குறித்து பாமக இளைஞர் அணி செயலாளரும் பாராளுமன்ற எம்பியுமான அன்புமணி, சூர்யாவுக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பதும் அந்த கடிதத்திற்கு சூர்யா பதில் கடிதம் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாமகவினர் சிலர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்பதும் சூர்யாவை தாக்குபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூர்யாவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும், அரசியல் பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் சூர்யாவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து சூர்யா தனது டுவிட்டரில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மீது நீங்கள் அளிக்கும் அன்பு அபரிதமானது என்றும் இதற்கு முன்பு நான் இதுபோன்று பார்த்ததே இல்லை என்றும் நன்றியை வார்த்தைகளால் விவரிக்கவே முடியவில்லை என்றும் ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு ஆதரவாக நிற்கும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி என்றும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
Dear all, this love for #Jaibhim is overwhelming. I’ve never witnessed this before! Can’t express in words how thankful I am for the trust & reassurance you all have given us. Heartfelt thanks for standing by us ✊????
— Suriya Sivakumar (@Suriya_offl) November 17, 2021





















