கேலரி
சைடு போஸில் சாச்சிப்புட்டியே!… மனசை கொக்கிப் போட்டு இழுத்த ஷிவானி…

ரெட்டை ரோஜா, சரவணன் மீனாக்ஷி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். திடீரென தனது புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.

எனவே, பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பம் முதல் கிட்டத்தட்ட 80 நாட்கள் வரை பாலாஜி உள்பட ஒரு சிலரிடம் மட்டுமே நெருக்கமாக பழகி வந்தார் என்பதும் மற்ற போட்டியாளர்களிடம் கலகலப்பாக இல்லாதவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் வைக்கப்பட்டதாக டாஸ்க்கில் சிங்கப்பெண்ணாக வெற்றி பெற்று அதன் பின் 90 நாட்களுக்கு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர். எனவே, அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் அவர் அவ்வப்போது பாடல்களுக்கு நடனமாடியும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஒருபக்கமாக பார்த்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.



















