தமிழ்நாடு
ஒரே நாளில் ரூ.400க்கும் மேல் குறைந்த தங்கம் விலை!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400க்கு மேல் குறைந்துள்ள தகவல் தங்க நகை பிரியர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4451.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 51 ரூபாய் குறைந்து ரூபாய் 4400.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 35608.00என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 408 குறைந்து ரூபாய் 36240.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4804.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38432.00எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 51ம், ஒரு சவரன் ரூபாய் 4084ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 68.50 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு ஐம்பது காசுகள் குறைந்து ரூபாய் 68.00 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 68000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.














