தமிழ்நாடு
சபாநாயகர், துணை சபாநாயகர் வேட்பாளர் அறிவிப்பு: இன்று முறைப்படி தேர்வு!

தமிழக சட்டமன்ற சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் வேட்பாளர்களை திமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவர்கள் இருவரும் இன்று முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மூத்த திமுக உறுப்பினரும் ராதாபுரம் எம்எல்ஏவுமான அப்பாவு அவர்கள் சபாநாயகர் பதவிக்காக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் துணை சபாநாயகர் பதவிக்கு பிச்சாண்டி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர்கள் இருவரும் நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அதன்பின் அவர்கள் தங்களது பணியை தொடர்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
மூத்த திமுக உறுப்பினர் அப்பாவு அவர்கள் சட்டசபையை மிக சிறப்பாக நடத்துவார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீண்ட அரசியலில் நீண்ட அனுபவம் உள்ள அவர் சட்டசபையை திறம்பட நடத்துவார் என்று எதிர்க்கட்சிகளில் உள்ள ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.














