தமிழ்நாடு
துரைமுருகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
தற்போது அவருக்கு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர மருத்துவ தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துரைமுருகனின் மகனும் வேலூர் தொகுதி எம்பியுமான கதிர் ஆன்ந்த் அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் துரைமுருகன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. துரைமுருகன் அவர்கள் கொரோனா பாசிட்டிவ் காரணமாக எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சரியான சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது, வேறு எந்த பிரச்சினையும் அவருக்கு இல்லை. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துரைமுருகன் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என திமுக தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


















