Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/03/2021)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

24-Mar-21 

புதன்கிழமை

மேஷம்:

இன்று தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

ரிஷபம்:

இன்று புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்:

இன்று குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நன்மை தரும். மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப் பெண் பெற முயற்சி செய்வீர்கள்.  

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கடகம்:

இன்று தேவையான உதவிகள் கிடைக்கும். நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

சிம்மம்:

இன்று எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி:

இன்று வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 

துலாம்:

இன்று புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்:

இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தனுசு:

இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்:

இன்று பணவிஷயத்தில் சிக்கனத்தை கடை பிடியுங்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர்  பயணம் செல்ல நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

கும்பம்:

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்:

இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.  

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

Translate »
Ekologia w produkcji suplementów. Experience the luxury of a hot oil massage at suksamai massage. podpora plodnosti mužů.