சினிமா செய்திகள்
ப்ரியா பவானிசங்கரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானிசங்கர் ஆகியோர் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் தெரிந்ததே. சுமந்த் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கி வந்த இந்த படத்தை டிரைடண்ட் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ’ஹாஸ்டல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டைட்டிலில் ‘பாய்ஸ் ஒன்லி’ என்று கேப்ஷனாக கொடுக்கப்பட்டு அதில் பாய்ஸ் என்பது அடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போபோ ஷஷி இசையில் பிரவீன்குமார் ஒளிப்பதிவில் ரகுல் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து ப்ரியா பவானிசங்கர் அடுத்ததாக ’களத்தில் சந்திப்போம்’ ’குருதி ஆட்டம்’ ’ஓ மணப்பெண்ணே’ ’பொம்மை’ ’இந்தியன் 2’ ’பத்து தல’ ஆகிய படங்களின் படப்பிடிப்பில் அடுத்தடுத்து கலந்து கொள்வார்.
And it’s titled #Hostel ???? @Ashokselvan @actorsathish @MemyselfSRK @pravethedop @BoboShashi @krrishskumar @muralikris1001 @teamaimpr pic.twitter.com/5uMW4wLjpZ
— Priya BhavaniShankar (@priya_Bshankar) March 10, 2021




















