Connect with us

வார பலன்

உங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (2021, மார்ச் 7 முதல் மார்ச் 13 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

புத்தி சாதுரியத்தால்  புகழையும், செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே, இந்த வாரம்  எண்ணிய காரியங்களை  திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த  இடமாற்றம் கிடைக்கும். பயணம்  செல்ல வேண்டி இருக்கும்.  சில முக்கியமான  முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.

.தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம்  வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.

பெண்கள் சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

பரிகாரம்: கிருத்திகை  விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

சொன்ன சொல்லை காப்பாற்றும் குணமுடைய ரிஷப ராசியினரே,  இந்த வாரம் தைரியமாக எதையும் செய்வீர்கள். உங்களது செயல்களால் உங்களுக்கு  மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும்.

எதை பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை  துணையின்  மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும்.

பெண்களுக்கு எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

எளிதில் யாருடனும் நண்பராகும் திறமை பெற்ற மிதுன ராசியினரே, இந்த வாரம் வீண் மனக்கவலை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது  எச்சரிக்கை தேவை.

தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள்  காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம்  வாக்குவாதத்தை  தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை  கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை.

பெண்கள் அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை.

மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப் பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கவலைகளை வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த  முகத்துடன் காணப்படும் கடக ராசிக்காரர்களே இந்த வாரம் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த  காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.

தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.  பயணங்கள்  செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தாமதமாக கிடைக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலை பளு ஆகியவை இருக்கும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணிய பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆடம்பர பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.

பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரை பற்றி  எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை  உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: சிவன் கோயிலுக்கு  சென்று சிவன், அம்பாளை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மன குழப்பத்தை நீக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

துணிச்சலாக எதையும் செய்து வெற்றி  பெறும் சிம்ம ராசியினரே, இந்த வாரம் வீண் அலைச்சல் காரிய தடை ஏற்பட்டாலும் தடை நீங்கி காரியங்கள்  நடந்து முடியும். அலைச்சல் ஏற் பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள்  உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும்.  சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். 

தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக  எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள்  ஆதரவும் இருக்கும்.

குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை  அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் கூடும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.

பரிகாரம்: சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

வாக்கு நாணயம் தவறாமலும்  உண்மைக்காக பாடுபடும் குணமும் உடைய கன்னி ராசியினரே, இந்த வாரம் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண்பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஏற்பட்டாலும் செலவு கட்டுக்குள் இருக்கும். மன சஞ்சலம் தீரும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும்.

வியாபாரம், தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் அவர்களிடம் திறமையாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் தொழில் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய புது திட்டங்களை பற்றி ஆலோசனை செய்வீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புது தொழிலில் முதலீடு  செய்யும் போது கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவது நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூறும் கருத்துகளுக்கு எதிர்த்து பேசுவதை விட்டுவிட்டு நிதானமாக உங்கள் கருத்தை சொல்வது  நன்மை தரும்.

பெண்களுக்கு கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம்.

மாணவர்கள் வீண் விவாதங்களை தவிர்த்து கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வர எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

நடக்காது என்று எதையும் நினைக்காமல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற துடிப்புடைய துலா ராசியினரே, இந்த வாரம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை  ஆலோசித்து செய்வது நல்லது. மனம் நிலை கொள்ளாமல்  ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. ஆனால் பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேல் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும்.

பெண்கள் சதா எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும்  முன்பு தீர ஆலோசிப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது.

பரிகாரம்: சுமங்கலி பூஜை செய்து சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

மற்றவர்களை அறிந்து அவர்களுக்கேற்ப நடந்து கொண்டு காரியம் சாதிக்கும் திறமை உடைய விருச்சிக ராசியினரே, இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம்  காரியவெற்றி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும்.

குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எல்லா வகையிலும் நன்மையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எதிர் பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல் படுவீர்கள்.

பரிகாரம்: நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கும் தனுசு ராசியினரே, இந்த வாரம்  எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை  யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக  இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும்.  கடன் தொல்லைகள் குறையும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும்.

வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கப்பெறுவீர்கள்.

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.

பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

பொது காரியங்களில் விருப்பம் உள்ள மகர ராசியினரே, நீங்கள் திறமை சாலிகளாகவும் இருப்பீர்கள். இந்த வாரம் அறிவுத்திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம்  பலரது உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில்  கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.

பெண்களுக்கு அறிவு திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர் பார்க்கலாம்.

மாணவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்கப்பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனி

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து அதில் ஈடுபடும் குணமுடைய கும்பராசியினரே, இந்த வாரம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம்.

எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவு படுத்திக்கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.

பரிகாரம்: ஆஞ்சனேயரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

நீதி, நேர்மை, உண்மை என்று எப்போதும் பாடுபடும் மீன ராசியினரே, நீங்கள் எதிர்ப்புகளை எளிதில் வெல்லுவீர்கள். இந்த வாரம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்கள் செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற் கொண்டவர் களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லா சுகவாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும்.

பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: குல தெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்3 minutes ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்7 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா7 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்7 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Producent suplementów diety. Hvad er watercast fra rib båd med mai event, aarhus c ?. devamını oku ».