வைரல் செய்திகள்
தல தோனியின் அடுத்த அவதாரம்; ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

இந்திய கிரிக்கெட்டின் மூடிசூடா மன்னன் தோனி, சென்ற ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு குட்-பை சொன்னார். ஆனால், அவரின் ரசிகர்களுக்கு இன்னும் தோனி களத்தில் இருப்பது போலத்தான். தோனி குறித்து எந்த செய்திகள் வந்தாலும் ‘தல’ ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டு வருகின்றனர். தற்போது தோனி, அடுத்த அவதாரம் எடுத்துள்ளார். இந்த முறை தோனி ‘விவசாயி’ என்னும் அவதாரம் எடுத்துள்ளார்.

தோனி ராஞ்சியில் 43 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமான வீடு கட்டி, குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதில் 10 ஏக்கர் அளவில் மிகப் பெரிய விவசாயப் பண்ணையும் வைத்துள்ளார். அதில் தக்காளி, ஸ்டிராபெர்ரி, முட்டைக் கோஸ், பப்பாளி என பல்வேறு விளை பொருட்களை இயற்கை விவசாயம் மூலம் விளைவித்து வருகிறார். தற்போது இந்தப் பொருட்களை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முழு வீச்சில் வேலை செய்து வருகிறார் தோனி. அவர், தன் பண்ணைத் தோட்டத்தில் விவசாயம் செய்யும் போட்டோகள் மற்றும் மேற்பார்வையிடும் போட்டோங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


















