ஆரோக்கியம்
Weight Loss Tips: இந்த இயற்கை உணவுகளை சாப்பிட்டு எடை குறைங்க!

உடல் பருமனைக் குறைக்கப் பல்வேறு ஷேக்குகள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட பவுடர்கள் என மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இப்படி எத்தனை தயாரிக்கப்பட்ட பொருட்கள் வந்தாலும் இயற்கையாக கிடைக்கும் உணவுகளுக்கு ஈடாக முடியாது. அப்படி இயற்கையாக கிடைக்கும் சில உணவுகள் எடை குறைப்பிலும் உதவும். எடைக் குறைப்புக்கு மிகவும் முக்கியமானது நார்ச்சத்து. இவ்வகை சத்துகள் கொண்ட உணவுகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை கொடுத்து, பசியையும் போக்கி, எடை குறைப்புக்கும் உதவும் வல்லமை கொண்டிருக்கின்றன.
அப்படி குறைந்த விலையில் அதிக நன்மை தரக்கூடி நார்ச்சத்து வகை உணவுகள் குறித்து பார்ப்போம்.
முள்ளங்கி:
முள்ளங்கியில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகள் அடங்கியிருக்கின்றன. முள்ளங்கியை முடிந்தவரை பச்சையாக சாப்பிட்டால் அதன் சத்துகளை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள முடியும்.
கொய்யா:
கொய்யாப்பழம், நமக்கு கிடைக்கும் அருமருந்து. எடை குறைப்புக்கு மட்டுமல்ல நீரிழிவு நோய் இருப்பவர்களும் கொய்யாப்பழத்தை அதிகமாக சாப்பிடலாம். இந்தப் பழத்தில் அடங்கியிருக்கும் சத்துகளின் பட்டியல் மிக நீளமானது.
கேரட்:
கேரட் என்பது கண்ணுக்கு மட்டுமல்ல, எடை குறைப்புக்கும் உகந்த உணவு. கேரட்டைப் பச்சையாக உட்கொள்ள பழக வேண்டும். சாலட், சூப், ஜூஸ் போட்டும் கேரட்டை சாப்பிடலாம்.
பீட்ரூட்:
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பீட்ரூட்டையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது எடை குறைப்புக்கு மட்டுமல்ல இதயத்திற்கும் நல்லது. இதில் பொட்டாஷ்யம் சத்து அதிகம் இருப்பதால் டென்ஷனைக் குறைக்கும்.
ஆப்பிள்:
பழ வகைகளில் ஆப்பிள், எடை குறைப்புக்கு உகந்தது. குறைந்த கலோரியில் நிறைய சத்துகளை ஆப்பிள் கொடுக்கும். முடிந்தவரை நிறைய ஆப்பிள்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்லது.










