கிசு கிசு
தளபதி 65 இயக்க போவது இவர்தானா? வைரல் ஆகும் தகவல்!

தளபதி 65 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி நீண்ட காலமாக உள்ளது.
முதலில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் நடிக்கும், தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் விலகவில்லை.
ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதையில் விஜய்க்கு சில மாற்றங்கள் தேவைப்பட்டதாகவும், அதில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு விருப்பம் இல்லை என்ற காரணத்தால் அவர் விலகியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திபீப் குமார், விஜய்யை இயக்க உள்ளதாகவும், விஜயிடம் கதை சொல்ல அனிருத் உதவியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சிவகார்த்திகேயன் இயக்கத்தில், டாக்டர் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன் கண்டிப்பாக விஜய்யை வைத்து தளபதி 65-ஐ இயக்க அதிக வாய்ப்புள்ளது.








