இந்தியா
இன்றைக்கும் எகிறியது பெட்ரோல் விலை: பொதுமக்கள் கடும் கோபம்!

வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகின்றனர் பொதுமக்கள். இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டு தான் இருக்கின்றது.
கடந்த 15 ஆண்டுகளாக மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கலாம் என்ற முறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி முதல் இந்த முறை கைவிடப்பட்டு நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.
இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென தொடர்ச்சியாக உயர்ந்து வந்தன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை குறைக்க தீவிர போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் எந்தவித பயனும் இல்லாமல் இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து 85.69 ரூபாயாக விற்கப்படுகிறது. டீசல் விலையில் மாற்றமில்லாமல் 78.10 ரூபாய்க்கு விற்படுகிறது. இந்த புதிய விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளது.




















