இந்தியா
இரவு நேரச் செய்திகள் – 28.11.2026

- ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையின் விண்வெளிப் பிரிவு மூன்று புதிய இராணுவ ட்ரோன்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ‘சய்’ எனப்படும் ட்ரோன், எதிரி ட்ரோன்களை எதிர்கொள்வதற்கான நான்கு சுழலிகளைக் கொண்ட தற்காப்பு ட்ரோனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘காஸ்தக்’ எனப்படும் மற்றொரு ட்ரோன், தன்னிச்சையாகச் செயல்படும் சிறியரகத் தற்கொலைத் தாக்குதல் ட்ரோனாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் ஸ்விட்ச்பிளேட் 300 அமைப்பை ஒத்த சிறியரகத் தற்கொலைத் தாக்குதல் ட்ரோன் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு கூட்டுக் குடும்பச் சொத்தினை வாய்மொழியாகப் பிரித்த பின்பு அத்தகைய சொத்திற்குத் தனிப்பட்ட முறையில் பட்டா பெற்றுக் கொள்வதும் அந்தச் சொத்திற்கு வரி செலுத்துவதும் அத்தகைய கூட்டுக் குடம்பச் சொத்தினை வாய்மொழியாகப் பிரித்துக் கொண்டதற்கான உறுதிப்படுத்தும் சான்றாகும். அத்தகைய வாய்மொழிப் பாகப்பிரிவினை செல்லும். – சட்ட உதவி விழிப்புணர்வு.
- இஸ்ரேலில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், அந்நாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்கிறது.
- பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் இருப்பில் உள்ள மருந்துகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்ய வேளாண்மை – உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், “பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி அனைத்து பசுமையான களைகள் மற்றும் பயிர்களை தொடு நஞ்சாக செயல்பட்டு அழிக்கக்கூடியது. இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 1.5 மில்லியன் மெ.டன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு விஷமுறிவு மருந்து இல்லாத காரணத்தினால், வருடத்திற்கு சராசரியாக 17,000 பேர் இம்மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
- உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் நாங்கள் தீபம் ஏற்றியுள்ளோம். தீபம் ஏற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என யாரும் தகராறு செய்யவில்லை. எல்லாரும் சகோதரர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள்தான் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள். – ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் பேட்டி.
- வரும் 30ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் தொடங்குகிறது. தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஆகியவை கொண்டுவரப்பட உள்ளன.
- ஈரான் மீது உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதற்குத் தீர்க்கமான மற்றும் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக ஈரானியப் படைகளின் உயர்மட்டத் தளபதிகள் எச்சரித்துள்ளனர். ஈரானைத் தாக்கும் எதிரிகளின் அனைத்துப் பகுதிகளும் தங்களுக்கான நியாயமான இலக்குகளாகக் கருதப்படும் என்றும் ஈரான் இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
- தாலிபான்களின் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்கள் எதிர்கொள்ளும் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
- பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் உயிரிழந்திருந்தாலும் வாரிசுச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம். இறந்தவரின் வாரிசுகளை உறுதிப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டால், கிடைக்கக்கூடிய ஆவணங்கள் மற்றும் உறுதிமொழிப் பத்திரங்களைப் பரிசீலிக்கலாம். வாரிசுச் சான்றிதழ் என்பது உறவுமுறையை உறுதிப்படுத்தும் ஆவணம் மட்டுமே. வாரிசுச் சான்றிதழ் வழங்கப்பட்டதாலேயே சொத்துரிமை தானாக உருவாகாது. வருவாய்த்துறை விண்ணப்பத்தை நிராகரித்தால், நிராகரிப்புக்கான காரணங்களையும் ஆதாரங்களையும் ஆராய்ந்து சட்டப்படி மேல்நடவடிக்கை மேற்கொள்ளலாம். உரிய சூழ்நிலைகளில் உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரலாம்


