இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.11.2026

- ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாடு வரும் நவம்பர் 19-ஆம் தேதி (வியாழக்கிழமை) சீனாவின் தொழில்நுட்பத் தலைநகரான ஷென்சென்னில் நடைபெறவுள்ளது!
- குண்டு துளைக்காத கண்ணாடிகளாலும் உயிரைக் காப்பாற்ற முடியாது என மிரட்டல்! பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு பிரபல தாதா தில்லான் விடுத்துள்ள கொலை மிரட்டலால் திரையுலகில் அதிர்ச்சி!
- தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்! கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்த் மறைத்து வைத்திருந்த 6 கிலோ நகைகளும் பறிமுதல்! கொள்ளையடிக்கப்பட்ட 11.7 கிலோ நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டதாக போலீசார் தகவல்.
- ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் – துனி இடையே வரும் நவம்பர் 20-ம் தேதி அதி தீவிர புயலாக அக்வான் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை!
- மேகதாது அணை திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம்
- பாலகிருஷ்ணன் மரணத்தை காவல் மரணமாக வழக்குப்பதிவு செய்தது சிபிசிஐடி! பாலகிருஷ்ணன் இறப்பு தொடர்பாக காவல் மரண வழக்காக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில் (FIR) குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கும், சிசிடிவி கேமராவில் பதிவான நேரத்திற்கும் இடையே வேறுபாடு இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நேர முரண்பாடு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
- தென் கொரியாவில் தேர்வில் சிறப்பாகச் செயல்பட உதவும் எனக் கூறி ADHD மருந்துகளைச் சட்ட விரோதமாக விற்பனை செய்த 571 இணையப் பதிவுகளை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- ஏற்கனவே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் மகேந்திரசிங் தோனி.
- நாடு முழுதும் சுமார் 180000 ரயில்வே ஊழியர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அட்டையை வைத்திருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பு.





