இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.11.2026

- நேற்று பண்ருட்டியில் காவல் நிலையத்துக்குள்ளேயே ஒரு பெண் தீக்குளிப்பு. மதுரை செக்கானூரனியில் காவல் நிலையத்துக்குள்ளேயே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை.
- மதுரை டாடா தனிஷ்க் நகை கடையில் 15 சவரன் நகைகள் கொள்ளை போனது தொடர்பாக மீனாட்சி என்ற இன்ஸ்டா இன்ஃபுளுயன்சரும் ஒரு யுடியுபரின் தந்தையும் கைது.
- ரொட்டியை சாப்பிடும் முன் ஃப்ரீசரில் வைத்து, பின்னர் டோஸ்ட் செய்தால் என்ன நன்மை தெரியுமா? ரொட்டியை உறைய வைத்து, பின்னர் டோஸ்ட் செய்வதால் அதிலுள்ள ஸ்டார்ச்சின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் உணவுக்குப் பிறகு இரத்தச் சர்க்கரை திடீரென உயர்வதைக் குறைக்க உதவலாம். சில ஆய்வுகளில் சுமார் 40% வரை குறைவு காணப்பட்டுள்ளது.
- இந்திய சினிமாவில் முதல் முறையாக! *ராமாயணம் வெறும் 8 நாட்களில் ₹1,000 கோடியை கடந்த இந்திய சினிமாவின் முதல் தொடர்ச்சி அல்லாத படம்* ஆகி வரலாறு படைத்தது.
- சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதா? ராணிப்பேட்டையில் ஜெம் வீரமணி வீட்டில் காவல்துறை அதிரடி சோதனை
- அசாம் மாநிலம் கம்ரூப் என்ற இடத்தை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவில் 4ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி!!
- வம்பர் 13, 14 தேதிகளில் ஹைதராபாத்தில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த ‘பாரத் உச்சி மாநாடு’ நடைபெற்றது. இதில் பங்கேற்க 70-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி பெற்ற 315 பேச்சாளர்களில் 115 பேருக்கு இந்தியா வர அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்.
- மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பின!





