செய்திகள்
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?
Published
36 minutes agoon
By
Poovizhi
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் சரியான நேரமாக கருதப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்தவர்கள் தற்போது விண்ணப்பித்தால், குறுகிய காலத்திலேயே புதிய ரேஷன் கார்டு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் பிறகு புதிய அரசு பொறுப்பேற்கிறது. புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பின்னர், அரசு சேவைகள் மற்றும் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு விரைவாக ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கும் பணிகள் வேகமடையும் என கூறப்படுகிறது. ஏற்கனவே கள ஆய்வு முடிந்த விண்ணப்பங்களுக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டு, அதன் பின்னர் புதிய விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட உள்ளன.
இதனால் தற்போது விண்ணப்பித்தால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதிய ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது?
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. மொபைல் அல்லது லேப்டாப் மூலமாக வீட்டிலிருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு “புதிய மின்னணு அட்டைக்கு விண்ணப்பிக்க” என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் குடும்பத் தலைவர் பெயர், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை சரியாக பதிவு செய்ய வேண்டும். குடும்பத் தலைவரின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன்பின் தேவையான ரேஷன் கார்டு வகையை தேர்வு செய்யலாம். அரிசி கார்டு, சர்க்கரை கார்டு உள்ளிட்ட விருப்பங்கள் வழங்கப்படும்.
மேலும், குடியிருப்பு சான்று மற்றும் எரிவாயு இணைப்பு விவரங்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களையும் அப்லோடு செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, விண்ணப்ப எண் கொண்ட ஒப்புகைச்சீட்டு கிடைக்கும். அதை பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி ரேஷன் கார்டின் நிலையை ஆன்லைனில் சரிபார்க்கலாம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

தமிழ்நாடு அரசின் புதிய ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத்தொகை மற்றும் பொங்கல் பரிசு: லேட்டஸ்ட் அப்டேட்!

ரேஷன் கார்டு வகை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைகள் வெளியீடு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கியமான நான்கு ஆவணங்கள் – தமிழக அரசு அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: திருமணமாகாத பெண்கள் ரூ.1000 பெற புதிய வாய்ப்பு!

ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்யாதவர்களுக்கு கடைசி எச்சரிக்கை – தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் – மாவட்ட வாரியாக முழுவிவரம்!












