சினிமா செய்திகள்
தென்னிந்திய சினிமாவில் ரூ. 4,000 கோடி முதலீடு.. முகேஷ் அம்பானியின் அடேங்கப்பா திட்டம்!

தென்னிந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சியில் புதிய திருப்புமுனையாக, JioHotstar அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 4,000 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசுடன் இன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது.
சென்னையில் நடைபெற்ற இந்த உயர்மட்ட நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பத்ம பூஷன் கமல்ஹாசன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களுடன், தென்னிந்திய திரை உலகின் முக்கியமான பிரபலங்களான மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
வேலைவாய்ப்பும், தொழில் வளர்ச்சியும்
இந்த கூட்டாண்மை மூலம் தமிழகத்தில்:
1,000 நேரடி வேலைவாய்ப்புகள்
15,000 மறைமுக வேலைவாய்ப்புகள்
உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“திரைப்படத் துறையின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியுடன் நேரடியாக இணைந்துள்ளது. படைப்பாற்றலுக்கான சூழலை தமிழக அரசு தொடர்ந்து வலுப்படுத்துகிறது,” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
JioHotstar அறிவித்த புதிய படைப்புகள்
நிகழ்வில் 2026-க்கான 25 புதிய தலைப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் சில முக்கியமானவை:
பிரபல தொடர்களின் புதிய சீசன்கள்
Kerala Crime Files S3
Save The Tigers S3
Good Wife S2
புதிய ஒரிஜினல் படைப்புகள்:
Cousins and Kalyanams
Lingam
Vikram on Duty
Roslin
வரவிருக்கும் முக்கிய தயாரிப்புகள்:
விஜய் சேதுபதி நடித்த “காட்டான்”
நிவின் பாலி நடித்த “பார்மா”
‘ஆர்யா’ தொடரின் தென்னிந்திய வடிவமான “விஷாகா”
மேலும் Bigg Boss தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தொடரும் நிலையில், ‘Roadies’ தெலுங்கில் முதன்முறையாக அறிமுகமாகிறது.
“இந்திய சினிமா” என்ற புதிய அடையாளம்
நிகழ்வில் உரையாற்றிய கமல்ஹாசன்,
“இனி தமிழ்ப் படம், தெலுங்கு படம் என எல்லைப்படுத்தாமல், ‘இந்திய திரைப்படங்கள்’ என்ற அடையாளமே உருவாகும். காந்தாரா, த்ரிஷ்யம் போன்ற படங்கள் அதற்கு சான்று,” என்றார்.
“தெற்கு இந்தியா என்றும் படைப்பாற்றலின் தாய் நிலம்,” என JioHotstar தெற்கு பொழுதுபோக்கு கிளஸ்டர் தலைவர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார்.
ஒரு புதிய பொழுதுபோக்கு யுகத்தின் தொடக்கம்
மோகன்லால், நாகார்ஜுனா, தனுஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை ஒரே தளத்தில் கொண்டு வரும் இந்த முயற்சி, இந்திய பொழுதுபோக்கு உலகத்தை மறுவரையறை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
₹4,000 கோடி முதலீடு கொண்ட இந்த ஒப்பந்தம், தென்னிந்திய திரைப்படத் துறைக்கு உலகளாவிய வாய்ப்புகள், புதிய தளங்கள், மற்றும் உச்ச வளர்ச்சியை உருவாக்கும் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.










