சினிமா
மாதம்பட்டி ரங்கராஜ் vs ஜாய் கிரிஸில்டா: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பரபரப்பு!

பிரபல கேட்டரிங் தொழிலதிபரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜ், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜாய் கிரிஸில்டா – மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை
ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கி விட்டு, தற்போது விலகி விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், 2023ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாகவும், ஒன்றரை ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்ததாகவும், கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பு சம்பவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவுகள், #MadhampattyPakashala என்கிற கேட்டரிங் பிராண்டின் பெயரை சேதப்படுத்தும் வகையில் உள்ளதாக ரங்கராஜ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு & 12.5 கோடி இழப்பு
அவதூறு கருத்துகள் வெளியிடுவதைத் தடுக்கவும், வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்கவும் கோரி, மாதம்பட்டி ரங்கராஜ் உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.
மேலும், ஜாய் கிரிஸில்டாவின் கருத்துகளால், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் நிறுவனத்திற்கு 15 நாட்களில் ₹12.5 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், இதற்காக தனி மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வாதங்கள்
மாதம்பட்டி தங்கவேலு நிறுவனம், ரங்கராஜ் பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; பிராண்டின் பெயரை சேர்க்கக் கூடாது என வாதித்தது.
அதற்கு எதிராக, “வெறும் ரங்கராஜ் என்றால் யாருக்கும் தெரியாது; அவர் பிராண்டை காப்பாற்றுவதற்காகவே இந்த வழக்கு” என்று ஜாய் கிரிஸில்டா தரப்பு பதிலளித்தது.
அடுத்த விசாரணை
நீதிபதி, இழப்புக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு ரங்கராஜ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். வழக்கு செப்டம்பர் 24 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












