ஆரோக்கியம்
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி – வீட்டிலேயே ஹோட்டல் சுவை!
Published
9 மாதங்கள் agoon
By
Poovizhi
விடுமுறை நாட்களில் காலை அல்லது மதிய உணவிற்கு பூரி, சப்பாத்தி, சாதம் எது செய்தாலும், அதற்கு சைடிடிஷாக ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா செய்து பாருங்கள். வழக்கமாக செய்வதை விட ஹோட்டல் ஸ்டைலில் செய்வதால் சுவை இரட்டிப்பு ஆகும்.
இந்த சிக்கன் மசாலா பூரி, சப்பாத்தி மட்டுமின்றி, சோறு வகைகளுடனும் அற்புதமாக சேரும். இதை ஒருமுறை சுவைத்தால் அடிக்கடி செய்ய சொல்லி விடுவார்கள்.
தேவையான பொருட்கள்
ஊறவைக்க:
சிக்கன் – ½ கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
தயிர் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
அரைக்க:
தக்காளி – 2
முந்திரி – 10-15 (நீரில் 30 நிமிடம் ஊற வைத்தது)
கொத்தமல்லி – சிறிது
தாளிக்க:
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1½ டீஸ்பூன்
சீரகத் தூள் – ¼ டீஸ்பூன்
தண்ணீர் – 100 மில்லி
உப்பு – சுவைக்கேற்ப
கரம் மசாலா – ¾ டீஸ்பூன்
கொத்தமல்லி – அலங்கரிக்க
செய்முறை
சிக்கனை நன்றாக கழுவி, ஊற வைக்கும் பொருட்களுடன் கலந்து 30 நிமிடம் மூடி வைக்கவும்.
தக்காளி, ஊற வைத்த முந்திரி, கொத்தமல்லி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கி, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அரைத்த கலவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
மசாலா தூள்கள் சேர்த்து கிளறி, ஊற வைத்த சிக்கனை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கவும்.
தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் 15-20 நிமிடம் வேக விடவும்.
இறுதியில் கரம் மசாலா, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
ஹோட்டல் தரத்தில் சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா ரெடி!
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

















