வணிகம்
OPS அமலுக்கு வருமா? – பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எதிர்பார்ப்பு மீண்டும் உயர்வு!

பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு அமல்படுத்துமா? ஊழியர்கள் எதிர்பார்ப்பு அதிகம்!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் ஒரு முக்கிய கோரிக்கை பழைய ஓய்வூதியத் திட்டம். தற்போது ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப், கர்நாடகம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இது இன்னும் அமலுக்கு வரவில்லை.
பழைய திட்டத்தின் சிறப்புகள்:
2003 வரை அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தின் படி, அரசு ஊழியர்கள் வாங்கிய கடைசி சம்பளத்தின் 50% ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. மேலும் குறைந்தது 10 ஆண்டுகள் பணி செய்திருந்தால், அவர்களுக்கு முழுமையான ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்பட்டன. விஆர்எஸ் பெற்றவர்களுக்கும் பல சலுகைகள் இருந்தன.
புதிய ஓய்வூதிய திட்டத்தின் பின்னடைவு:
2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதில் ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்தை பங்களிப்பு அடிப்படையில் சேமித்து, ஓய்வு பெறும்போது தொகையாக பெற வேண்டியுள்ளது. இதனால் பலர் நிதிநெருக்கடியில் உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
திமுக வாக்குறுதி மற்றும் தற்போதைய நிலை:
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகியும் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
தற்போது, அரசு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து, வரும் செப்டம்பரில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என ஊழியர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.




















