வணிகம்
EPF Update: PF பணத்தில் இருந்து 90% வரை எடுக்கும் புதிய வசதி – 3 வருட பங்களிப்பால் போதும்!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
PF சேமிப்பில் இருந்து 90% பணத்தை எளிதில் எடுக்கும் புதிய சலுகை – EPFO புதிய அறிவிப்பு!
EPF உறுப்பினர்களுக்கான பெரிய நல்ல செய்தி இது! தற்போது மாத வருமானம் பெறும் ஊழியர்கள் தங்களது PF சேமிப்பிலிருந்து வீடு கட்டவோ, நிலம் வாங்கவோ 90% வரை பணத்தை எளிதாக எடுக்கலாம். இதற்கு முன்னர் 5 வருட பங்களிப்பு தேவைப்பட்டது. ஆனால் தற்போது இந்த கால அவகாசம் வெறும் 3 வருடங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு வருடத்திற்கான அட்வான்ஸ் கிளைம் செய்யக்கூடிய உச்சவரம்பும் ₹5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், எப்போதும் முன்பதிவு அல்லது அங்கீகாரம் இன்றி EPF பணத்தை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
✅ முன்பு இருந்த EPF விதிகள்:
58 வயதில் பணி ஓய்வு பெற்ற பின் முழு தொகை பெறலாம்.
2 மாதங்கள் வேலை இல்லாத நிலையில் PF பணத்தை எடுக்க அனுமதி.
வீடு, மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற சில காரணங்களுக்கே பகுதி தொகை வித்டிரா செய்ய அனுமதி.
✅ புதிய EPF Withdrawal நிபந்தனைகள்:
3 வருட பங்களிப்பு இருந்தால் 90% தொகை வித்டிரா செய்யலாம்.
முன்னேற்பாடு தேவையில்லை, நேரடி அட்வான்ஸ் கிளைம் மூலம் பணம் பெறலாம்.
அதிகபட்சமாக ₹5 லட்சம் வரை ஒரு முறையில் பெறலாம்.
வீடு வாங்கல், நிலம் வாங்கல், வீடு கட்டுதல் போன்ற தேவைகளுக்காக இந்த வசதி.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

















