வேலைவாய்ப்பு
விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடியினருக்கான அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடியினர் (ST) பிரிவில் ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனம் செய்யப்படுகிறது.
அரசாணை எண்.32, நாள்: 20.04.2022 – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவிப்பின் கீழ், இந்த பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது என்றாலும், அரசு சம்பள விகிதத்தில் நிரப்பப்பட உள்ளது.
பணி விவரங்கள்:
பதவி பெயர்: அலுவலக உதவியாளர்
பணியிடம்: விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
இடஒதுக்கீடு: பழங்குடியினர் (ST)
காலிப் பணியிடங்கள்: 1
சம்பளம்: ₹15,700 – ₹58,100 (Pay Matrix) + DA மற்றும் ஹரா
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு (01.07.2025 அடிப்படையில்):
குறைந்தபட்சம் – 18 வயது
அதிகபட்சம் – 37 வயது (அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு)
தேவையான ஆவணங்கள் (Self-attested copy):
கல்வித் தகுதி சான்றிதழ்
சாதி சான்றிதழ் (ST)
பிறந்த தேதி சான்றிதழ்
மாற்றுச் சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்)
முகவரிக்கான சான்றிதழ்
ஓட்டுநர் உரிமம் (ஏதேனும் இருந்தால்)
1 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பம் பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்
முகவரி மேலே:
“வேலை வாய்ப்பு விண்ணப்பம் – அலுவலக உதவியாளர்” என்று உறையின் மேல் குறிப்பிட வேண்டும்கடைசி தேதி: 25.07.2025 மாலை 5.00 மணி
முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம்:
👉 www.viluppuram.nic.in

















