வேலைவாய்ப்பு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி 10% மருத்துவ இட ஒதுக்கீடு? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தற்போது 7.5% ஆக உள்ளது. ஆனால், NEET தேர்வில் நகர்ப்புற மாணவர்களை விடப் பின்தங்கியுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்துவது தொடர்பாக சட்ட ஆலோசகர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, விரைவில் அதிகாரபூர்வ முடிவை வெளியிடுவார்” என்றும் தெரிவித்தார். இது நடைமுறையில் வந்தால், மருத்துவ படிப்பு கனவு காணும் ஆயிரக்கணக்கான அரசு பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு பெரிய வரமாக அமையும்.
இதே நேரத்தில், மாநில அரசு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


